Saturday, March 9, 2013

ஒரு கோப்பை வானம்..!!

தானே உடைந்து சிதறும் 
பனித் துளிகளில் எத்தனை வானம் உண்டு , 
மனிதன் சுமக்கும் கனவுகளை போல..!!

இது மிட்டாய் வாழ்க்கை..

தவற விடுவதும் , தாவிப் பிடிப்பதும் 
இல்லாமல் மிட்டாய் கிடைப்பது இல்லை..!!

புல்லின் நுனி 

ஓர் பனி 
வானத்து பிம்பம் 
அதை பார்க்கும் நீ !
உனை பார்க்கும் நான் !
நமை பார்க்கும் காதல் !


சட்டையில் அடைப்பட்ட பட்டாம்பூச்சி , கழற்றிய பின் மனிதனானது .!!

காற்றெனும் பறவை..!!

வானத்தின் வர்ணம் கீறி 
நீலமாகிறது இறகு ..!!
மிதந்து ஓய்ந்து வீழ்வதற்குள் 
மீண்டும் பறவையாகிறது இறகு..!!
உடலில்லா இறகை ஏற்றுக்கொள்வதில்லை வானம்..!!
தான் பறவையல்ல என்பதை 
இறகும் மறந்துபோகுது ..!!
இறகும் , வானமும் காற்றெனும் பறவையால் மிதப்பதை யார் சொல்வார்..!!