Monday, November 22, 2010

வெயிலோடு மழை பிடித்து..

என் விரத்தி கனவுகளுக்கு - என் விளக்கம் போதவில்லை - என்
வர்ண காம வாசலில்  வெள்ளைத்துளி தெளித்தது.


நடுநிசி நாய்களாய்  அலைந்த கனவு -விடிந்ததும்
உருமாறி  கூவிச்சென்றது .


அதன் பிறகு  ????????


கையில் அடுத்த சம்பளம் வரும் வரை ........


இத்துடன்  முடிகின்றேன் ..........


அதுவரை நலமோடு இரு, சிவப்பு  தெரு நிலவே எனக்காக......

பிறர்தர வாரா......

பின்னிரவில்  நான் உறங்கிய போது எனை சுற்றி என் கனவுகள் கையில் பானையுடன் சுற்றிய பின்னும் ..

யாருமற்ற  அறையில் என்னுடன் -நான் உறங்கிய பின்னும்

ஐம்புலன்களையும்  என் அகத்தில் கண்ட பின்னும்

ஞானமே சுடராக ஆன பின்னும் ...

தீதும் நன்றும் பிறர் தர வருமோ ?

இதுதானோ உண்மை .

பேருந்து பயணத்தில் ....


நான் பார்த்த பெண்ணிற்கு என் வயதிருக்கும் .


அவளை பார்த்த ஆணிற்கு அவள்  தந்தை வயதிருக்கும் .


இந்த உலகம் உருவாக -ஒருகனியை மட்டுமா கடிதாய் ஆதாம்???

வந்தாரை வாழவைக்கும் ....

அவனுக்கு பசியை காட்டிலும் சோறு எனும் வார்த்தை கொடூரமாக  தோன்றியது .


நாய்க்கு சோரூடிய மாடி வீட்டு பாட்டியை வெறித்துப் பார்க்கின்றான் .


சப்த நெரிசலில் பொருளாதார சீர்திருத்த மாநாடு .


இடையூறாக இருப்பான் என  அவனை விரட்டும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு.



யாதுமாகி........

அந்த இரவு  நிசப்தமாக இருந்தது ..... 
மழைத்துளியினுள்  மின்மினி போல .. 
நகர்ந்து கொண்டிருக்கும்  நிலவின் நிழல்  போல .. 
இறந்துகொண்டிருக்கும்  மூதாட்டியின் கனவு போல .. 
உறங்கிகொண்டிருக்கும்  பிட்சைகாரியின் மௌனம்  போல.. விழித்துக்கொண்டிருக்கும்  பூனையின் சிந்தனை போல ..
பாமரனின் வியர்வை போல .. 
காதலை சொல்லிய இளைஞனின்  கூச்சம் போல.. 
காதலை மறுத்த  பெண்மையின்  பொய்யை போல..  
வாடகை தாயின் கருவை போல..
 குழந்தையின்  கண்கள் போல.. 
டீ கடை நாயரின்  சந்தனப்பொட்டு  போல ..

இப்படி யாதுமாகிய  இரவை நான் ரசித்ததே இல்லை. நாளைக்கு பையனுக்கு பொறந்த நாள்
dress எடுக்க காசு இல்ல ... ஹையோஒ...  ஹையோஒ ...


இந்த இரவு எப்பொழுதும் நிசப்தமாகவே  இருகின்றது.....