உன் முத்தம் தந்த ஈரம் .
நீ அழுத போது நான் சிரித்தது .
நான் அழ நீயும் அழுதது.
அன்றிரவு நடந்த யாகம்.
உனை கண்டு காகமும் கலவி கொண்டது .
பேய் பிசாசு எல்லாம் திருமணம் முடித்துவிட்டது.
அப்பனும் அம்மையும் மறந்து போனார்கள்.
தம்பி தந்த 5 ருபாய் மட்டும் உன் கையில்.
நண்பர்கள் தந்த 1000 ருபாய் மட்டும் என் இருப்பில்.
கசங்கிய ஆடைகள் திருமண உடையான அந்த நாள்.
ஆசை மடிப்புகள் முழுதும் தேய்ந்து போன நம் இரவுகள்
வறுமை காதலும் வயதாகாமல் நிலைத்துவிட்டது.
இப்படி அத்தனை நேரமும் - நம்
காலமும் கடந்துவிட்டது .
இன்று நீ இறந்து விட்டாய் ..
எங்கேயோ போய் விட்டாய் ..
நமக்கு மகன் பிறந்து விட்டான்..
அவன் உனை கண்டு சிரிக்கின்றான் ..
நான் பரிதாபப்படுகின்றேன் .
நான் இன்று அழுகின்றேன் - நம் மகனும்
அழுகின்றான்.
அலைய தொடங்கிவிட்டேன் மீண்டும் ஒரு
இழப்பை தவிர்க்க ...
பழகிவிட்டேன் வெறும் பனியாய் மறைய ..
இப்படி பல பழகிவிட்டது.
தேடிக்கொண்டே இருக்கின்றேன் ..
நம் வாசத்தை...
வர்ணகளற்ற அந்த வானவில்லினை..
கடந்து கொண்டே இருகின்றது எனதான உன் காலம்.
அது முடியும் பொழுதும் மீதமிருக்கும்
நீ தந்த ஈரமும்...
நமக்கான நம் நினைவுகளும்...
ஆசை மடிப்புகள் முழுதும் தேய்ந்து போன நம் இரவுகள்
ReplyDeleteவறுமை காதலும் வயதாகாமல் நிலைத்துவிட்டது..
nice words..