மரணம், அதுதனியொரு உயிரின் இழப்பு மட்டும் அல்ல.மீதமிருக்கும் நம் காலங்களில் ,பிறரிடம் நாம்காட்டவேண்டிய அன்பிற்க்கான நினைவூட்டலும் கூட.
மரணத்தை பற்றி புதிதாக விவரிக்கவோ ,ஆய்வு செய்யவோ ஏதேனும் மீதம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.ஆனால், அது இழப்பு. நம்முடன் பயணித்த ,நம்முடன் உரையாடிய , நம்முடன் சிரித்துவிளையாடிய ,நம் அருகில் அமர்ந்திருந்த ஒரு உயிரின் இழப்பு.நம் வாழ்வில் மீண்டும்காண முடியாத ஒரு உயிரின் இழப்பு.
காரணமின்றி உள்நுழையும் காற்றைப்போலதான்,மரணனும்நுழைகிறது,நாம் எதிர்பார்த்தும்,எதிர்பாராமலும்.ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயம்தான் என்றாலும், அவ்விழப்பிலிருந்து மீண்டுவருவதற்க்கான மனச் சூழல், காலம் காலமாக ஒரே சூழலில்தான் இருக்கிறது.அதுவெற்றிடம்.ஓர் உயிர் இருந்த இடத்தில், இப்பொழுது இருக்கும் அளவற்ற வெற்றிடம்.
மரணம் ஏன் வருகிறது என்பதற்க்கானவிளக்கம் நம்மால் அவ்வளவு எளிதாய் சொல்லிவிட முடியாது.மாறாக,அது விட்டுச் செல்லும்மீதமிருக்கும் காலத்திற்க்கான பொருளை தவிர,மரணம் உணர்த்திச் செல்வது வேறொன்றும்இல்லை.மரணம், அது நிச்சயம் என்றாவது நிகழவிருக்கும் ஒன்றுதான் என்றாலும்,உள்ளுக்குள் அதை எதிர் கொள்ளவேண்டிய கட்டாய முரண்தான், நம்மை பயம் கொள்ளச் செய்கிறது.
மரணத்தை எதிர் கொண்ட வீடு எப்படிஇருக்கும்.
அவ்வீட்டில் உள்ளோரது மனநிலையை எப்படி தேற்றிவிட முடியும்.
கூடி ஆறுதல் சொல்லலாம்,கண்ணீர் துடைத்துவிட்டு ,நம் கரங்களை ஈரமாக்கிக்கொள்ளலாம்.தோள்பற்றி அழுபவரின் மூச்சினை ஆசுவாசப் படுத்தலாம்.எத்தனை ஆறுதல் எப்படிசொன்னாலும்,மனம் தன்னை மூடிக் கொண்டிருக்கும் போது இழந்தவர்களின் உள்ளே, எதுநுழைந்துவிடமுடியும்?அவர்கள் என்ன யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நம்மால் ஒருபோதும் ஊகித்துவிடமுடியாது.
தாங்கள் இழந்த அவ்வுயிரின்நினைவுகளையா..?இல்லை, எதிர் கால வாழ்வின் புதிர்களையா..?எதை யோசித்துக்கொண்டிருப்பார்கள்.?இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளை ஒரு இழப்பு விட்டுச் செல்கிறது.
மரணம் ஒரு உயிரை எடுத்துக் கொண்டு ,ஓராயிரம் தத்துவங்களையும் ,வாழ்வின் யதார்த்தத்தையும் மீதமிருக்கும் உயிர்களுக்காகவிட்டுச் செல்கிறது.மரணம்,அது தன்னை இழந்து வாழ்வை சொல்லிக் கொடுக்கும் மகத்தானஆசான்.
. மரணம் உணர்த்திச் செல்வது ஒன்றைதான்.
அது நினைவுகள். இழந்த ஒரு உயிரின் கடந்த கால நினைவுகள்.எதிர் காலத்தில் அவ்வுயிரைபற்றி நாம் சேகரித்து வைக்கவிருக்கும் ஞாபகங்கள். காற்றோடு இங்குமங்குமாய் சுழன்றுகொண்டிருக்கும் ஒரு இலையை போன்று பயணித்த நினைவுகள்.
என்றாவது ஒரு நாள் ,,?இல்லை இந்தநிமிடம்,.? இல்லை நாளை...இப்படி என்றாவது, நாம் இறக்கத்தான் போகிறோம் என்பதை,நாம்ஏற்றுக் கொள்ள இயலாவிட்டாலும்,அதுதான் மரணம் பற்றிய யதார்த்தத்தின் நகைமுரண்.
மரணத்தின் அடுத்த நிமிடத்திலிருந்துஎத்தனை காலம் அடுத்தவர் நினைவில் அழியாமல் பதிந்து கிடக்கப் போகின்றோம் என்பதைத்தான், மரணம் தன்னைஇழக்கச்செய்து, அதன்வழி சொல்லிச் செல்கிறது.
மரணம்,அது வெறும் இழப்பு மட்டும் அல்ல.
நம் வாழ்வின், மறு நிமிடத்துக்கான தொடக்கமும் கூட.
நல்லாருக்கு ஆனா வாழ்தல் இனிதுனும் கூட எழுதலாம்.... எழுதினால் என்னய tag பன்னுங்க
ReplyDelete