Tuesday, October 29, 2013

நாளொரு வண்ணம்..!!

எங்கே போனாய் நீ..., .?

நீண்ட பயணத்தில் 
நிறுத்துமிடம் இல்லாத சாலை தோறும் 
பயணித்துக் கொண்டே இருக்கிறது என் மனம்.

ஆசுவாசமாய் உடல் சாய்ந்து,
ஓரிரு வார்த்தைகள் பேசி 
நீண்ட நாட்களாகி விட்டது .

எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ள 
இயலவில்லை என்னால் - என் 
தனிமையின் சலனத்தை.

நீயாக வீசிவிட்டுப் போன சிறகொன்று 
எதனை பின்தொடர இயலும் 
காற்றில்லா இவ்வெளியில்..!!

இருளில் ஒளிந்துகொண்ட 
நிழலானப் பின் 
உன்னை எங்கே தேடுவேன்..?

1 comment:

  1. லிடியாJuly 13, 2022 at 10:43 PM

    உனக்குள் இருக்கும் என்னை வழியெங்கும் தேடினால் எப்படி கிடைப்பேன்....????

    ReplyDelete