சமீபத்திய நிகழ்வுகள்,என்னை பயணங்கள் மேற்கொள்ள தூண்டுகிறது.மனிதர்கள் அதிகமாக வசிக்காத இடங்கள்,பறவைகளைபார்க்க இயலும் விடியற்காலைகள்,மூச்சுக் காற்றின் ஓசை துல்லியமாக கேட்கமுடிந்தநிசப்தம்.இப்படி சராசரி நிலைகளில் இருந்து வேறுபட்ட இடம் ஒன்றை நோக்கி எனைதள்ளுகிறது, என் மனம்.
எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் பயணம்தேவைப்படுகிறது.அது ஏதோ ஒரு நிலையிலிருந்து ,தன்னை விடுவித்துக் கொள்ள, நாம்முயன்றுகொண்டிருக்கும் நிலை. நிறைய வேலைகள்,கனவுகள் இருந்தாலும் அவ்வப்போது பயணம்தேவைபடுகிறது.அது உள்ளுக்குள் தன்நிலை தேடும் பயணம்.உலகத்தை,உணர்வுகளை,மனிதர்களை,இயற்க்கையை புரிந்துகொள்ள நாம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயப்பயணம்.அதற்க்கான வழிகளை நாமாக அமைத்துக்கொள்ள கூடிய பயணம்.
குருவிகளின் விளையாட்டை நிதானமாக ரசிக்க,நம் சராசரி வாழ்க்கை இடமளிப்பதில்லை.மாறாக குருவிகளே இல்லாத தேசத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.அப்படி குருவிகளை , எறும்புகளை , பறவைகளை , மீன்களை நிதானமாகநமக்குள் கொண்டு சேர்க்க,நமக்கான பயணம் தேவை.இயற்கையோடு பயணிக்க ஒரு மனநிலைவேண்டும்.அது மனிதர்களிடம் இருக்கும் சராசரி இயற்க்கை பற்றிய புரிதலைவிட மேலானது.நாம்வனத்தை பார்த்ததுண்டு.ஆனால்.., உணர்ந்ததுண்டா ..?நீண்ட வனம் நம் மனமெங்கும் பரவி இருக்கிறது.அங்குஎல்லாமே வசித்துக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் யாருடைய கட்டுப் பாட்டில்.?நாம்வனத்திற்கும் வேலி போட்டுவிட்டோம்.வனத்தின் அடர்த்தியை உணர முடியாத வேலியொன்றைஅமைத்து விட்டோம்.
பயணம் எனை மாற்றிவிடுமா என்றால்,எனக்கு தெரியாது.ஆனால் எந்த பயணத்தை தொடர வேண்டும் என்பதை,ஒரு பயணத்தில்தான்தெரிந்து கொள்ள முடியும் என்பதை, நான் நம்புகிறேன்.அதற்க்காக ஒரு பயணம் தேவை.
மனிதர்களை பற்றி , மனிதர்கள் இல்லாதஇடத்தில்
தெரிந்து கொள்ளும் பயணம்.

Last finishing was awsome மனிதர்கள் இல்லாத இடத்தில் மனிதர்களை பற்றி அறிந்துகொள்ள wow keep writing
ReplyDeleteNandri 🙏
Deleteகடைசியில் உள்ள 2 வரியில் மேலே உள்ள 39 வரிகளுக்கு அர்த்தம் புரிந்தாயிற்று
ReplyDeleteNandri
ReplyDelete