எள்ளி நகையாடி இன்பமதை அடைவேனோ!
இலை நகரும் திசை ஓடி காற்றைப்பிடிப்பேனோ!
மன மேனி நிறம் காண வாழ்வைத்தொலைப்பேனோ!
இல்லை - யோனியதை யோகமென அலைவேனோ!
அண்டம் பேரண்டமென தேடலைத்தொடர்வேனோ!
பறவையின் நிழலை பாற்க்கடலில் பார்ப்பேனோ!
மோக முட்களை இறுதிவரை பெறுவேனோ!
வள்ளுவன் குறிதனில் எதைச்சுமந்தானோ -அதை
முழுதாய் பெற தினமும் புணர்வேனோ!
ஆணென பெண்னென பேதம் பார்ப்பேனோ!
அந்த ஆண்டாள் செய்ததை நானும் செய்வேனோ!
உலகை இகழ்ந்திட ஒரு சொல் தேடேனோ!
அது நானென உணர்ந்தபின் உண்மை அறிவேனோ!
நான் நானாக இருப்பதை அறுத்து எறிவேனோ!
முற்றும் முடிந்த பின் முழுதாய் நிலைப்பேனோ!
என் செய்வேன் மனமே - நினை என் வசம் வைக்க
மரித்துக்கொண்டிருக்கும் என் மரணத்தை மௌனமாக்க!?
இலை நகரும் திசை ஓடி காற்றைப்பிடிப்பேனோ!
மன மேனி நிறம் காண வாழ்வைத்தொலைப்பேனோ!
இல்லை - யோனியதை யோகமென அலைவேனோ!
அண்டம் பேரண்டமென தேடலைத்தொடர்வேனோ!
பறவையின் நிழலை பாற்க்கடலில் பார்ப்பேனோ!
மோக முட்களை இறுதிவரை பெறுவேனோ!
வள்ளுவன் குறிதனில் எதைச்சுமந்தானோ -அதை
முழுதாய் பெற தினமும் புணர்வேனோ!
ஆணென பெண்னென பேதம் பார்ப்பேனோ!
அந்த ஆண்டாள் செய்ததை நானும் செய்வேனோ!
உலகை இகழ்ந்திட ஒரு சொல் தேடேனோ!
அது நானென உணர்ந்தபின் உண்மை அறிவேனோ!
நான் நானாக இருப்பதை அறுத்து எறிவேனோ!
முற்றும் முடிந்த பின் முழுதாய் நிலைப்பேனோ!
என் செய்வேன் மனமே - நினை என் வசம் வைக்க
மரித்துக்கொண்டிருக்கும் என் மரணத்தை மௌனமாக்க!?
என்செய்வேன் - இனி
என்செய்வேன்!!
No comments:
Post a Comment