விரட்டியடிக்கப்பட்ட நாயென - என்
வீடு தேடி வந்தது நன்றியுள்ள மழை...
எரியும் பிணமென
விறைத்து விழுந்தது என் மனதில் ..
எத்தனை முறை வீழ்ந்த பின்னும் - இன்னும்
அரசனாகவே என் மழை ..
உனை முழுதாய் முத்தமிட
எண்ணிய நாளில் நான் சிறுவனாக இருந்தேன் ..
இன்றும் நீ அதே மழையாக இருகின்றாய் - நான்
அதே சிறுவனாக இல்லை ..
ஆடை களைந்து உனை சூடிக்கொள்ளவே விருப்பம் - ஆனால்
சட்டையனியவே சாபம் பெற்றேன்...
என்றேனும் ஒரு நாள் என்னுள் உயிரென
உயிரணுவாவாய் -அன்று
யாரோடு புணர்ந்து உனை மீண்டும்
புனிதமென ஜனிக்கச்செய்வேன்..
நிச்சயம் மனிதரோடு அல்ல .
கடவுளோடும் அல்ல .
வழியேதும் இல்லையெனில்
நானே உனதாவேன் .
அன்று நான் மனிதனாக இருக்கமாட்டேன் .
பிறக்காத உயிரணு நாம் ..
இறந்தபின் அமைதியும் நாம் ..
இப்படி யாதுமாகி நாம் ..
ஒரேயொரு அச்சம் மட்டுமே எனக்கு ....?
மானிடரே மழையோடு நான் கொண்ட
உறவை கள்ளத்தொடர்பென பேசாதீர் ...
வீடு தேடி வந்தது நன்றியுள்ள மழை...
எரியும் பிணமென
விறைத்து விழுந்தது என் மனதில் ..
எத்தனை முறை வீழ்ந்த பின்னும் - இன்னும்
அரசனாகவே என் மழை ..
உனை முழுதாய் முத்தமிட
எண்ணிய நாளில் நான் சிறுவனாக இருந்தேன் ..
இன்றும் நீ அதே மழையாக இருகின்றாய் - நான்
அதே சிறுவனாக இல்லை ..
ஆடை களைந்து உனை சூடிக்கொள்ளவே விருப்பம் - ஆனால்
சட்டையனியவே சாபம் பெற்றேன்...
என்றேனும் ஒரு நாள் என்னுள் உயிரென
உயிரணுவாவாய் -அன்று
யாரோடு புணர்ந்து உனை மீண்டும்
புனிதமென ஜனிக்கச்செய்வேன்..
நிச்சயம் மனிதரோடு அல்ல .
கடவுளோடும் அல்ல .
வழியேதும் இல்லையெனில்
நானே உனதாவேன் .
அன்று நான் மனிதனாக இருக்கமாட்டேன் .
பிறக்காத உயிரணு நாம் ..
இறந்தபின் அமைதியும் நாம் ..
இப்படி யாதுமாகி நாம் ..
ஒரேயொரு அச்சம் மட்டுமே எனக்கு ....?
மானிடரே மழையோடு நான் கொண்ட
உறவை கள்ளத்தொடர்பென பேசாதீர் ...
No comments:
Post a Comment