இங்கே காதலெனப்படுவது ...?
மரணமோ ..?- இல்லை
மனப்பிறழ்வோ...?
அன்று முளை விட்ட மோகமோ ..?
இன்றைய அயல்நாட்டு ஆர்வமோ.. ?
ஏதேனும் ஒன்று காதல் எனப்படும்.
அது சாலையோர நட்பாகலாம் .
நடுநிசி நாடகம் எனலாம் .
நான் நீயென சொல்லலாம் .
நீ இல்லை வாழ்வில்லை எனலாம்.
என் வருவாய் போதுமெனப்படலாம்.
எனது தனிமை பிடிக்காமல் போகலாம்.
உடல் தீண்டவே ஆர்வம் - இருந்தும்
உண்மை காதலென பேசப்பிடிக்கலாம் .
எனது கனவுலகம் கசப்பாகிப்போகலாம் .
உனது யோகத்தில் நான் பொருந்தாமல் போகலாம்.
அன்று செய்தது தவறு என்று பேசலாம்.
நான் சரியா என்றும் யோசிக்கலாம் .
எவரேனும் உனை நேசிக்கலாம் .
அதில் யாரென முடிவு செய்யலாம்.
ஏதேனும் ஒன்று நிச்சயம் நிகழ்ந்தாகவேண்டும்.
அது உன் குழந்தைக்கு என் பெயராகவோ ..? - இல்லை
என் திருமணத்திற்க்கு உனை அழைப்பதாகவோ ..?
எது நிகழுமோ.. ? நிகழாதோ.. ? -ஆனால்
முற்றும் முடிந்திருக்கலாம் .. ?
ஏதேனும் ஒன்று நிகழும் வரை ..
மரணமோ ..?- இல்லை
மனப்பிறழ்வோ...?
அன்று முளை விட்ட மோகமோ ..?
இன்றைய அயல்நாட்டு ஆர்வமோ.. ?
ஏதேனும் ஒன்று காதல் எனப்படும்.
அது சாலையோர நட்பாகலாம் .
நடுநிசி நாடகம் எனலாம் .
நான் நீயென சொல்லலாம் .
நீ இல்லை வாழ்வில்லை எனலாம்.
என் வருவாய் போதுமெனப்படலாம்.
எனது தனிமை பிடிக்காமல் போகலாம்.
உடல் தீண்டவே ஆர்வம் - இருந்தும்
உண்மை காதலென பேசப்பிடிக்கலாம் .
எனது கனவுலகம் கசப்பாகிப்போகலாம் .
உனது யோகத்தில் நான் பொருந்தாமல் போகலாம்.
அன்று செய்தது தவறு என்று பேசலாம்.
நான் சரியா என்றும் யோசிக்கலாம் .
எவரேனும் உனை நேசிக்கலாம் .
அதில் யாரென முடிவு செய்யலாம்.
ஏதேனும் ஒன்று நிச்சயம் நிகழ்ந்தாகவேண்டும்.
அது உன் குழந்தைக்கு என் பெயராகவோ ..? - இல்லை
என் திருமணத்திற்க்கு உனை அழைப்பதாகவோ ..?
எது நிகழுமோ.. ? நிகழாதோ.. ? -ஆனால்
முற்றும் முடிந்திருக்கலாம் .. ?
ஏதேனும் ஒன்று நிகழும் வரை ..
No comments:
Post a Comment